Mudhra

Purpose of This Group

This initiative, rooted in the sacred lineage of Siddhargal Kottam, is inspired by the highest spiritual vision imparted through the subtle wisdom of our revered Gurus. Recognizing the deep challenges faced by many elderly individuals today—such as stress, loneliness, and emotional suffering—our Gurus compassionately perceived that these unresolved states often persist beyond physical death, leaving subtle imprints on the soul and causing it to linger in obscurity.

With this profound insight, they offered focused spiritual guidance to support and uplift the elderly. They revealed that the subconscious impressions and mental disturbances experienced in old age can be gently released and harmonized through the dedicated practice of mudras, especially when done in connection with nature’s healing energy.

Key Spiritual Benefits

  • Healing of Physical Ailments
    Supports the body’s natural healing processes by balancing energy and relieving discomfort.
  • Inner Peace for Mind and Soul
    Cultivates mental stillness and emotional clarity, fostering deep spiritual calm and centeredness.
  • Grip of Karmic Impressions
    As we gently reduce the influence of vasanas—our deep-rooted desires and tendencies—the mind becomes more peaceful and attuned to inner stillness. This is especially important in later stages of life, when it’s time to free ourselves from attachments and turn inward.
  • Graceful Soul Transition After Death
    When the mind is quiet and free of clinging desires, the soul is better prepared for its sacred journey beyond death—guided by peace, rather than pulled by unfinished attachments.

With this vision, this team has been established to offer mudra training specifically for senior citizens. This initiative represents a foundational step toward holistic well-being—nurturing the soul, body, and mind. It is a spiritual endeavor guided by divine grace.

Siddhargal Kottam – Spiritual Service Team

ஆன்ம உறவுகளுக்கு வணக்கம்

இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதற்கான நோக்கம்

நமது சித்தர்கள் கோட்டம் குருமார்கள் சூட்சுமத்தில் உணர்த்திய உயர்ந்த ஆன்மீக குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டது. தற்போதைய கால சூழலில், பல முதியவர்கள் மிகுந்த மன இறுக்கம், தனிமை, உளைச்சலுடன் வாழ்கின்றனர்.
அவர்கள் இயற்கை எய்திய பின்னும், அந்த மன அழுத்தங்களும், தீராத எண்ணங்களும் அந்த ஆன்மாக்களில் பதிவாகி, தெளிவற்ற நிலையில் அலைந்து திரியும் சூழ்நிலைகள் உருவாகுகின்றன. இதை சூட்சும ரீதியாக உணர்ந்த நமது குருமார்கள், முதியவர்களுக்கு இந்த உடலை ஒரு கருவியாக கொண்டு நிம்மதி ஏற்பட தீவிரமான வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்கள்.

அவர்கள் கூறியது:
முதியவர்கள் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளான அந்த ஆழ் மன பதிவுகளை இயற்கையுடன் இணைந்த முத்திரை பயிற்சி மூலம் தீர்வு காண முடியும்.”

முத்திரைகள் மூலம்:
▪️ உடல் வியாதிகள் நிவர்த்தி
▪️ மன அமைதி அடைதல்
▪️ வாசனைகளின் கழிவு அகற்றுதல்
▪️ ஆத்ம சாந்தி அடைதல்

இதனைக் கருத்தில் கொண்டு, முதியவர்களுக்கு இந்த முத்திரை பயிற்சியை வழங்க இக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஓர் அடித்தள முயற்சி, ஆன்மா, உடல், மனம் – மூன்றிற்குமான புனரமைப்பின் முதல் படியாக நாம் இந்த முயற்சியை தொடங்கியுள்ளோம்.

இது ஓர் ஈசன் அருளுடன் பயணிக்கும் ஆன்ம பணி.

— நன்றி மற்றும் ஆசீர்வாதங்கள்
சித்தர்கள் கோட்டம் – ஆன்ம சேவை குழு